உன் நினைவுகளே போதுமடா !!
தனிமை தனிமை தனிமை என்கின்றனர்
தனிமையை தனியாகவோ கூட்டாகவோ கண்டதில்லை இதுவரை
ஒருவேளை தனிமையை தனிமையில்
தேடினால் கிட்டுமோ ??
சில காலம் தனிமையிலும் தேடிவிட்டேன் தனிமையை தேடி தேடியும் கிடைக்காதால்
தனிமை எனும் வார்த்தையையே
என் அகராதியிலிருந்து முழுதாய்,
முழுமுழுதாய் தனிமைபடுத்திவிட்டேன்
உன் நினைவுகளின் நிரந்தர துணையிருப்பால்... ........