அலையின் இரைச்சல்—நிறைவு

என்ன செய்து கொண்டிருக்கும்
உயிர்.....?
அழுகி புழுக்களின் உணவாகி
மட்கிபோகும் உடலை பார்த்து
பதபதைத்து
அழுது கொண்டிருக்குமா
அல்லது
சடலத்தில் பசியாறிய
புழுக்களின் புன்னகையை
ரசித்து கொண்டிருக்குமா.....?
...................................................................................
தன்னலம் தொலைத்தல் தான்
உயிரின் பணியா...
தன்னுடல் தொலைத்தலே
உயிரின் இலட்சியமா
என்னை நான்
தொலைத்தல் தான் .. வாழ்வா
என்னுடலையும்..தொலைத்தல்தான்
மரணமா....?
.........................................................................
தொலைத்தல் தான் வாழ்வென்றால்
எதை தேடுகிறேன்
எதை தேடி...... ஓடுகிறேன்....?
தேடி..... தேடி
தொலைத்தல்தான்
வாழ்வின் சுவராசியங்களா .....?
......................................................................................
இதுவரை
எதை எதை தேடி பெற்றேன்....?
பெற்றதை எல்லாம்
எப்படி தொலைத்தேன்....?
இந்த கேள்வி உயிரால் கேட்கப்படுமா
உயிரிடம் கேட்கப்படுமா...?
கேட்கப்பட போகும்
கேள்விகளின் விடைகளை
சேகரித்தல் தான் வாழ்வா.........?
................................................................................
விடைகளை தொகுக்கும்
தேடல்களின் மீது தானா.........
அலைகளின் இரைச்சலாய்
அடுக்கப் படுகின்றன
வினாக்கள் ...........?
...................................................................................
விடைகளை சுமந்து கொண்டு
கேள்விக்காக
காத்திருத்தல் தான்
வாழ்க்கை என்று
பேரிரைச்சலில் ....
புலன்கள் உணராமலேயே
புதைத்து விடுகின்றன
பொழுதுகளை ..................
.................................................................................

எழுதியவர் : sindha (16-Jan-13, 8:03 pm)
பார்வை : 111

மேலே