sindha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sindha |
இடம் | : நெல்லை ஏர்வாடி |
பிறந்த தேதி | : 30-Nov-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 1147 |
புள்ளி | : 417 |
சக உயிர்களின் உணர்வுகளுக்குள் விழி நுழைத்து கண்ணீர் விடும்
ஆன்மாவிற்கு கவிஞன் என்று பெயரிட்டால்
நான் ஒரு கவிஞனே....
*ஆமினாவும் ஐம்பது வாரியலடியும்*
____________________________________
"ஆமினா..வா.. இப்படி.."
"யாரையும்.. நம்பமுடியாதுப்பா "
"எனக்கு அப்பவே... தெரியும்"
"முண்டையிலவோ... எல்லாம் டிவி பாத்துத்தான் கெட்டழியுறாளுவ"
"மார்க்கம் தெரியாம வளத்த தாய்க்காரிய சாத்தனும்"
"புள்ளையா வளர்த்திருக்கா..
தாய் புத்தி..தானே.. வரும்"
இது.. இரண்டு வயசில் மகளின்
எதிர்காலத்தை.. மிதித்து..
தலாக்கு சொல்லி காணமல் போயிருந்த
ஆமினாவின் தந்தையின் திருமொழி..
பள்ளிவாசல் திண்ணையில
சிதறிக்கிடந்தன
ஜமாத்தின் வாய்கள்..
அத்தனைகண்களும்.
காஜியார் தீர்ப்புக்கு..
காத்துக்கிடந்தன..
அஸ்கரையும் ஆமினாவையும
தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி”என்ற எனதுகவிதை வெளியாகியுள்ளது.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் மிக்க நன்றி! என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
கல்லறைத் தோட்டம்
............
கல்லறைத்தோட்டத்தில்
இன்று
நடப்படுகின்ற
செடியொன்றிர்க்காக
கண்ணீரைத்
தெளித்துக்கொண்டிருந்தது
ஒரு கூட்டம்.
.....
தான் நடப்படும்
குழி எதுவாக இருக்குமென்று
அலைந்து திரிந்த
பார்வைகளால்
திசைத்தெரியாமல்
தெறித்துக் கிடந்தன
பல நீர்த்துளிகள்.
....
எங்கோ கொல்லப்பட்டிருந்த
பனைமரத்தின் எலும்புகள்
புதைக்கப்படுகின்றன
செடியைச்சுற்றி..
....
எத்தனைமுறை
உதறினாலும்
ஒட்டிக்கொண்டிருக்கின்றது
உள்ளங்கையில்..மண்..
......
மவுலவியின் பாங்கோசையில்
மெல்ல நொறுங்கி
விழுந்துக் கொண்டிருந்தது
நிசப்தம்.
........
செவிமடுத்த
சுவடுகளே இல்லாமல்...
நடப்பட்ட செடியும்
உப்பாற்று ஓடை...
.................................
உப்பாற்று ஓடையில்
வளர்ந்திருந்த
புதர்களுக்கிடையில்
தத்தளித்து மூழ்குகிறது
நீர்..
.......
தன் சதைகளை வெட்டி
உண்டுவளர்ந்த
கட்டிடங்களின்
கழிவுநீர்களையும்
வாஞ்சையோடு
ஏற்றுக் கொள்கிறது..ஆறு..
....
தெளிந்த நீரும்
துள்ளும் மீனும்
நாணலும் பூக்களுமாய்
இருந்த மனதுகளில்
கழிவுகளும்
விசப்பூச்சிகளும்
துர்வாடையும்தான்
மிஞ்சியுள்ளன..
இப்போதும்
சொல்லிக் கொண்டேஇருப்போம்
ஆற்றுக்கும் ஆளுக்கும்
என்ன தொடர்பு
இருந்துவிடப் போகிறது..?
......
கட்டாயம் மழைக்காக
அழுதுகொண்டும்
தொழுதுகொண்டும்
இருங்கள்
உங்கள் குப்பைகளைக் கழுவ
நீர்வேண்டும
தூரத்தில் தேவதை வெளிச்சம்
பரிச்சயமானது தான் - இருந்தும்
கண் கூசுகிறது எனக்கு!
சிறகுகள் இல்லை,
இருந்தும் எனை பறக்க செய்தவள்!
எனை நீங்கி பறந்தவள்!
மீண்டும் சுவாசிக்கிறேன் நான்,
அறை எங்கிலும் அவள் வாசனையே!
இதமாய் என் தலை கோதியவள்,
ஏதோ சொல்ல வாய் திறக்கிறாள்...
சட்டென யாவும் மறைய,
என் கட்டிலில் கிடக்கிறேன் நான்.
அந்த தேவதையின் பெயர் கொண்ட
ஒரு குட்டி தேவதை என் தலை கோதிக்கொண்டிருக்கிறாள்...
ப்பா, ப்பா... எழுங்கப்பா...
வாசலில் நீ போட்ட ரங்கோலி
எனக்கான சிக்கு கோலம்...
தாவணியில் வருகையில்
என்னிடம் கவிதை தீர்ந்துவிடுகிறது
மொத்த உருவமாய் நீ...
அடிக்கடி நீ
மாராப்பு சரி செய்யும்போது
மனசெல்லாம் மண்வாசனை...
நீயில்லா ஊர் திருவிழாவில்
கல்லெறிந்த மண்பானை நான்...
பாவாடை சட்டையோடு
நீ திரிந்த... குளக்கரையில்...
இன்னும் சுற்றித்திரிகிறேன்
அரைக்கால் டவுசரோடு நான்...
பொங்கல் புத்தாடையோடு
நீ என்னை தேடும்... ஓரக்கண்ணில்...
எனது பொங்கல் தித்திக்கிறது...
காதலின் மலை உச்சியில்
வரையாடாய் எட்டிப்பார்த்த என்னை...
கருவாடாய் சுட்டு தின்கிறாய்
உன் கொள்ளி கண்களால்...
உன் கன்னக்குழி
எனக்கான ஆறடி...
உன் அடர் மௌனங்கள்...
வார்த்தை
முகநூலில் அவ்வப்போது எழுதிய வரிகள் ஒரு தொகுப்பாக....
-----
அடுப்பில் நீ சமைக்கும்
முருங்கைக்காய் சாம்பார்
கொதிக்கும் போதே
நீ வாசமாகிறாய்
நானுன் வசமாகிறேன்.
---
சமையலறையில்
நீ வெங்காயம் நறுக்கி
அழும்போதெல்லாம்
பெண்பாவம் போக்க
நான் நளப்பாகம்
பழகத்துடிக்கிறேன்.
--
அள்ளியெடுத்து முடித்த
ஈரக்கூந்தலோடு
மார்கழி அதிகாலையில்
என் ஜன்னல் எதிரில்
குனிந்து நிமிர்ந்து
பதினாறு புள்ளி வைத்து
நீ வரைந்த கோலத்தில்
பதினேழாவது புள்ளியென
உன்னிடம் நான் கண்டதை
நீ கண்டு உணர்ந்தாலும்
யாரிடமும் சொல்லிவிடாதே.
என் அத்தைப் பெண்ணே !
அது மன்மத மிச்சம்
காதல் மச்சம்..!
--
எனது கற்பன
தளத்தில் உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என் உள்ளம் நிறைந்த பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் . இறைவன் நம் அக வாழ்விலும் , புற வாழ்விலும் பசுமை செழிப்பு அளிப்பானாக
தை..
இதயத்தை
அன்பால் தை...
நேசத்தை விதை
பகையை சிதை..
எருதைத் தழுவும்
தைரியத்தை.. தை
வள்ளுவத்தை
.அதன் எழுத்தை கருத்தை
நெஞ்சில் புதை..
தை..தை..என..
தையில் ஆனந்த தையல்
நெஞ்சோடு கொள்ளட்டும் மையல்..
வெளிப்படட்டும் நம்மினத்தின் புதையல்
...
தளத்தில் தமிழ் முஸ்லிம்கள் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்ற பதிவு காண நேர்ந்தது .அது பல நாட்களாய் என்னுள் உறுத்தலை ஏற்படுத்திய படியே இருந்தது . அது தொடர்பாக எழுதவேண்டும் என்ற உறுத்தலே ஆகும் .
முதலில் அது என்ன தமிழ் முஸ்லிம்கள் என்ற குறியீடு .சில அரசியல் தலைவர்கள் இடவொதுக்கீடு தொடர்பாக அரசாணைகளில் உருது முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்ட சமூகம் என அறிவிப்பதற்காக சொல்லப்படும் குறியீடா ... என்னை பொறுத்தவரை அது ஒரு தவறான குறியீடு ஆகும் . என்ன சமூகத்தில் நாம் வாழ்கிறோம் .இஸ்லாமியர்கள் தமிழ் பேசுவார்கள் ஆனால் அவர்கள் நம்மவர்கள் இல்லை என்ற தனிமை படுத்தலுக்கான குறிஈடு போன்றே அதன் பொருள் உணர்த்துகிறது . எங