கல்லறைத் தோட்டம்

கல்லறைத் தோட்டம்
............
கல்லறைத்தோட்டத்தில்
இன்று
நடப்படுகின்ற
செடியொன்றிர்க்காக
கண்ணீரைத்
தெளித்துக்கொண்டிருந்தது
ஒரு கூட்டம்.
.....
தான் நடப்படும்
குழி எதுவாக இருக்குமென்று
அலைந்து திரிந்த
பார்வைகளால்
திசைத்தெரியாமல்
தெறித்துக் கிடந்தன
பல நீர்த்துளிகள்.
....
எங்கோ கொல்லப்பட்டிருந்த
பனைமரத்தின் எலும்புகள்
புதைக்கப்படுகின்றன
செடியைச்சுற்றி..
....
எத்தனைமுறை
உதறினாலும்
ஒட்டிக்கொண்டிருக்கின்றது
உள்ளங்கையில்..மண்..
......
மவுலவியின் பாங்கோசையில்
மெல்ல நொறுங்கி
விழுந்துக் கொண்டிருந்தது
நிசப்தம்.
........
செவிமடுத்த
சுவடுகளே இல்லாமல்...
நடப்பட்ட செடியும்
நாளை
நடவிருக்கும் செடிகளும்..
.....
இப்போது
மவுலவியின் பாங்கோசையும்
முற்றுப் பெற்றிருந்தது..

........

எழுதியவர் : sindhaa (17-Jan-16, 10:56 am)
பார்வை : 176

மேலே