sindha- கருத்துகள்

வாழ்த்துக்கள் தோழா, கவிதையும் மிக அருமை

மிக அருமை...
ப்பா..ப்பா..இன்னும்.எழுதுங்கப்பா..

ஒவ்வொருவரிகளிலும்
காதலை தெளித்து இருக்கிறீர்கள்..
வாசிக்கிறேன்
ஒவ்வொரு எழுத்துக்களுக்கு பின்னாலும்
கடலலைகள் என்னை
நனைத்தெடுக்கின்றன..

எங்கோ நான் விட்டிருந்த
காதல் நினைவுகளை
அலையடித்து வருகிறது..

பறவைகள் தங்களுக்குள்
கடத்திக்கொள்ளும் பாஷையை
புரியத்தொடங்கும்போது
நான் உங்களிடமிருந்து விடுப்பட்டு
உங்கள் பாஷையில்
பைத்தியம் என்றாகிறேன். மிக அருமை...

செல்லமகள்
(எழுதாமல் விட்டவகைகள்)

அஞ்சி அஞ்சி
அஞ்சிக் கொள்கிறேன்
எதிரில் அவள்
போர்வையால்
முக மூடியிட்டு
நிற்கிறாள்..
.......
புல்வெளியில்
தவழ்கிறாள்..
மொய்த்தன பூக்கள்..
..
மேகமொன்றை
சுமக்க முயல்கின்றன
பனித்துளிகள்..
....
கூழாங்கற்கள்
வாசம் வீசத் துவங்குகின்றன
ஆம்
அவள் சமைக்கிறாள்..
.....
தவளையாகி
குரங்காகி
யானையாகிறேன்..
பாவம்
டார்வினுக்கு
மகளில்லை போலும்..

மிக்க நன்றி சகோ. இன்னும் எழுத தூண்டுகிறது .. மிக்க நன்றி .

மிக்க நன்றி சகோ. தலைப்பு மஹால் என்றுதான் எழுத நினைத்தேன் .ஆனால் இந்தியில் மஹல் என்றே உச்சரிக்கின்றனர் .அதனால் மஹல் என்று எழுதினேன் .

அய்யா..இந்த பகுதி என்னை மிகவும் கவர்ந்தது..
முப்பது வருடங்களுக்கு முன் இசுலாமிய பின்புலம் கொண்ட எங்கள் ஊரில் ஏழைப் பெண்களின் வாழ்வியலை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது..
பாய் முடைதல். ராட்டு சுற்றுதல் . பீடி சுருட்டுதல் என.. வீட்டிற்குள்ளேயே தன் பொருளாதாரத்தை தேடிய அவர்களின் உழைப்பும் .. வறுமையும் கண்முன் தோன்றுகிறது. மிக மிக எதார்த்தமாக உள்ளது...

விமர்சிக்க எனக்கு தகுதியில்லைதான் எனினும் வாசகனாக நான் உணர்வது .. மக்கள் பயன்படுத்தும் பிராந்திய உரைநடைகள் சொல்லாடல்கள் சற்று குறைவாக தென்படுவதாக உணர்கிறேன்.. அது இக்கதையின் யதார்தத்திற்கு மிகத்துணையாக இருக்கும் என உணர்கிறேன்..

இறைவன் நாடினால் அச்சுவடிவத்தில் நூலாகும் இப்புத்தகத்தின் பிரதி கண்டிப்பாக எனக்கு அவசியம் வேண்டும்..


மிக்க நன்றி... எனக்கு என்னவோ
எந்த மூங்கிலில் தன்
புல்லாங்குழலை த்
தேடுவான்
என்றுதான் எழுதியிருக்க வேண்டுமோ
என்று தோன்றுகிறது.

மிக்க நன்றி... தங்கள் ஊக்கம் இன்னும் எழுதவைக்கும் இறைவன் நாடினால்..

நான் தங்கள் கருத்திற்கு உடன் படுகிறேன் . எதிர்மறை கதா பாத்திரங்கள் தொலைகாட்சி நாடகங்களில் தோற்றுவித்தலின் விளைவு திரைப்படங்களின் விளைவுகளை விட மிக ஆபத்தானதாக கருதுகிறேன் .

மிக்க நன்றி நண்ப , இது நான் முயற்சித்த முதல் சிறுகதை. தங்கள் வாசிப்புகள் இன்னும் நம் மண்ணின் முகங்களை பதிவிட ஊக்குவிக்கிறது .

அகரத்தில் . ..உறக்கத்தின் கவிதை .. நன்று .

மிக்க நன்றி ஷர்பான் அவர்களே ..

சதைவடிவான
வாசகத்தின்
இசைவடிவான
முற்றுப்புள்ளி நீ.!
***
நிரந்தரமில்லாத
வாழ்க்கையை
நீ வார்த்தைகளற்றுப்
பாடுகிறாய்!
இனிக்
காணக்கிடைக்காதவன்
காதுகளற்றுக் கேட்கிறான்.!


மிக மிக அருமை. மனம் விட்டு சொல்கிறேன் வெகுநாட்களுக்கு பின் நல்ல கவிதை வாசித்த மகிழ்வை நான் பெருகிறேன் .


sindha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே