உதிர்ந்த பூக்கள்

உலர்ந்த பூக்கள்
............................
காகித குப்பைகளை
அப்புறப் படுத்துகின்றன
பூக்கள் .
பெரும் வறுமை புயலொன்றில்
வீசி எறியப்பட்ட
பூக்கள்தான் அவைகள் ..
.......................
அதிகாலை பொழுதுகளில்
கடல் செல்ல முற்படும்
கட்டுமரங்களால்
கலைக்கப்படுகிறது
உறக்கங்களும் அது வரைந்த
கனவுகளும் .

.......
தண்டவாள ஓரங்களிலும்
கடற்கரை மணல்தனிலும்
தங்கள்
காலடி தடத்தை
பதித்து கடக்கின்றன
பூக்கள் .

கல்வியின் வாசம்
மறுக்கப்பட்ட இப்பூக்கள்தான்
நாசியருகில் தூவுகின்றன
நம்பிக்கைகளை ..
...
தேசத்தைத்தான்
சுத்தம் செய்கின்றன
பூக்கள் –எனினும்
தேசியக்கொடியுடன்
சேர்க்கப்படாமலேயே
உலர்ந்து விடுகின்றன .
ஆம்
உண்மைதான் போலும்
உதிர்ந்த மலர்களை
யாருமே
கண்டுகொள்வதில்லை ..

எழுதியவர் : சிந்தா (6-Jan-16, 8:03 pm)
Tanglish : ularntha pookal
பார்வை : 311

மேலே