பழம்பெருமை

பழம் பெருமை மட்டும்
பேசியென் பயன் சொல்லடா
அதை நல்ல முறையில்
பாதுகாக்கத் தெரிய வேண்டுமடா

மனதில் ஆசை மட்டும்
கொள்ளுதலென் பயன் சொல்லடா
அதை ஆக்கம் கொள்ள
தேவையான முயற்சிகள் வேண்டுமடா

வண்ணக் கனவுகள் மட்டும்
கண்டென் பயன் சொல்லடா
அதை வாழ்வினில் காண
நல்லகாரியம் புரிய வேண்டுமடா

வளர்ச்சியை வாய் மட்டும்
வர்ணித்தலென் பயன் சொல்லடா
அதை சிறப்பாக எய்த
முறையான செயல்கள் தேவையடா

உள்ள குறைகள் மட்டும்
சொல்லியென் பயன் சொல்லடா
அதை உடனே நீக்க
உயரிய சீற்றம் கொள்ளடா

- செல்வா

எழுதியவர் : (6-Jan-16, 8:02 pm)
பார்வை : 249

மேலே