உறக்கம் - தூக்கம்

​கருவறையில் ஒத்திகை
கல்லறையில் அரங்கேற்றம்
தூக்கம் ...

​உண்டதால் மயக்கத்தில்
உழைத்தக் களைப்பில்
உறக்கம் ....

கவலைகள் மறந்திடும்
கனவுகள் பிறந்திடும்
தூக்கம் ...

இயற்கையில் இயல்பு
இறக்கையில் இறுதி
உறக்கம் ...

மாற்றுவழி மறந்திட
மனஅமைதி பெற்றிட
தூக்கம் ....

--------------------------------------

அயர்ந்த தூக்கம்
அனந்த சயனம்
ஆழ்ந்த உறக்கம்
ஆற்றிடும் உளைச்சலை .....

இரவன்று பகலிது
இவரிங்கு பூங்காவில்
ஈடில்லா சுகமது
ஈர்த்திடும் காட்சியிது .....

உறக்கமும் மருந்தே
உடலுக்கும் அவசியமே
ஊரடங்கு உத்தரவு
ஊணுக்கு உறுப்புகளுக்கு .....

எந்நிலை உறக்கமும்
எவருக்கும் எளிதல்ல
ஏகாந்த சூழ்நிலையும்
ஏற்றதே தூங்கிடவும் ....

ஐந்தருவிக் குளியலுக்கு
ஒப்பிடலாம் உறக்கத்தை
ஓர்நாளும் தவிர்க்காதீர்
ஔடதமே உயிர்வாழ ....!

பழனி குமார்
06.01.2016

எழுதியவர் : பழனி குமார் (6-Jan-16, 7:36 pm)
பார்வை : 1795

மேலே