காதலி

கர்வத்தில் பிறந்த கண்ணகியே,
காதலால் கொல்லும் கல்மனமே!
இரவில் தூக்கம் கலைத்தவளே ...
இரும்பேனும் இதயம் உடையவளே!!
மௌனம் கலந்த மாதுளையே...
தங்கம் குலைத்த தாரிகையே!!

நிலவின் அழகை மறைதவளே,
நிறத்தில் ஆப்பிள் பலச்சுலயே!!
அகத்தில் பாலின் வெண்ணிறமே,
முகத்தில் குழந்தை கலைநயமே..,
பாலில் நனைந்த பனிமலரே,
ஊணில் உறைந்த செந்தேனே!!

விண்ணில் சிதறிய விண்மீனே,
கண்ணில் தேங்கிய தேவதையே!!
எண்ணத்தில் சுற்றும் இளங்குயிலே ,
என்னை கொல்லும் ரச்சஷியே!!
இசையினும் இனிய மேன்குரலே,
இறத்தலும் உன்னால் சுகமள்ளவோ.....

எழுதியவர் : கன்தாசன் (6-Jan-16, 6:51 pm)
Tanglish : kathali
பார்வை : 239

மேலே