குறள் வித்தகம் - 3

கருவிழிப் பார்வையும் காதல்பே சும்,நின்
பருவமென் பாவின் கரு .

கிளிஞ்சல் சிரிப்பும் கிளர்ச்சி யளிக்கும்
களிப்பிலுன் செவ்வாய்க் கிளி .

நடன அசைவில் நளினமும் கூடும்
அடடா!நீ மெள்ள நட .

குறிஞ்சி மலராகக் கொய்தா யிதயம்
அறிவாய்நீ தான்யென் குறி.

படிப்படியாய் முன்னேறிக் காதலில் வீழ்ந்துத்
துடிப்புட னென்னைப் படி .

சகிப்பே னெனைநீவை தாலும் பிரியேன்
மகிழ்வாய் பிரிய சகி .

விரிவாகப் பேச வெளிச்ச மெதற்கு
புரிந்துப் படுக்கை விரி .

திரிபுர சுந்தரியுன் சேவையில் நானே
எரியும் விளக்கில் திரி .

உண்டி சுருங்க உடலு மிளைத்திடும்
பெண்ணே அளவுடன் உண் .

பொறுப்பு மிகுதியால் பொங்கியது கோபம்
வெறுக்காமல் சற்றே பொறு .


குறட்பா வித்தகம் :முதற்சொல் முடிவில்
*************************************************************
[இந்த உத்தியில் முதற்சீரில் வரும் சொல் ஈற்றுச் சீர்களில்
வேறு பொருளில் வரும்.]

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Jan-16, 5:20 pm)
பார்வை : 76

மேலே