தூரத்தில் தேவதை வெளிச்சம் - நிரலன்

தூரத்தில் தேவதை வெளிச்சம்
பரிச்சயமானது தான் - இருந்தும்
கண் கூசுகிறது எனக்கு!

சிறகுகள் இல்லை,
இருந்தும் எனை பறக்க செய்தவள்!
எனை நீங்கி பறந்தவள்!

மீண்டும் சுவாசிக்கிறேன் நான்,
அறை எங்கிலும் அவள் வாசனையே!

இதமாய் என் தலை கோதியவள்,
ஏதோ சொல்ல வாய் திறக்கிறாள்...

சட்டென யாவும் மறைய,
என் கட்டிலில் கிடக்கிறேன் நான்.

அந்த தேவதையின் பெயர் கொண்ட
ஒரு குட்டி தேவதை என் தலை கோதிக்கொண்டிருக்கிறாள்...

ப்பா, ப்பா... எழுங்கப்பா...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (12-Jan-16, 1:17 pm)
பார்வை : 1998

மேலே