சலாவு 55 கவிதைகள்
அழகே,
விண்மீன்கள் வெட்க படும் ..
உன் கண்களை கண்டு ..
பூவிதழ்கள் மலர மறுக்கும் ..
உன் இதழ்களை கண்டு ..
வண்ணத்து பூச்சிகள் வளம் வரும் ..
உன் வனப்பை கண்டு ..
பருவ காலம் மாறாமல் போகும் ..
உன் பருவம் கண்டு ..
இந்த பிரபஞ்சம் ஸ்தம்பிக்கும் ..
உன் பேரழகை கண்டு ..
நான் என்ன ஆவேனோ ..
என் பேனாவின் மை துளி ..
சொல்லும் கவிதை போல ..
உன் கண்களின் பார்வை துளி ..
சொல்லும் என் காதலை ..
பெண்ணே உன்னை ..
கவிதை வடிக்க முனையும் போது ..
என் இதயத்தில் இருந்து ..
வரும் உன் நினைவுகளுக்குள் ..
சாலை விபத்து ..
உன் விழியோரம் வழியும் ..
என் காதலில் ..
தினம் கரையும் என் மனது ..
....
...............................சலா,