தமிழ் முஸ்லிம்களும் பொங்கலும்1

தளத்தில் தமிழ் முஸ்லிம்கள் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்ற பதிவு காண நேர்ந்தது .அது பல நாட்களாய் என்னுள் உறுத்தலை ஏற்படுத்திய படியே இருந்தது . அது தொடர்பாக எழுதவேண்டும் என்ற உறுத்தலே ஆகும் .
முதலில் அது என்ன தமிழ் முஸ்லிம்கள் என்ற குறியீடு .சில அரசியல் தலைவர்கள் இடவொதுக்கீடு தொடர்பாக அரசாணைகளில் உருது முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்ட சமூகம் என அறிவிப்பதற்காக சொல்லப்படும் குறியீடா ... என்னை பொறுத்தவரை அது ஒரு தவறான குறியீடு ஆகும் . என்ன சமூகத்தில் நாம் வாழ்கிறோம் .இஸ்லாமியர்கள் தமிழ் பேசுவார்கள் ஆனால் அவர்கள் நம்மவர்கள் இல்லை என்ற தனிமை படுத்தலுக்கான குறிஈடு போன்றே அதன் பொருள் உணர்த்துகிறது . எங்கோ ஈழத்தில் உள்ள தமிழனை ஈழ தமிழன் , மலேய தமிழன் என்று ஏற்றுகொள்ளும் நாம் நம் அருகாமையில் உள்ள ஒரு தமிழனை தமிழ் முஸ்லிம் என்று அன்னியபடுத்தல் போல் உள்ளது அந்த குறியீடு
.
சரி தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்கள் என்றால் தமிழ் பேசும் இந்து என்ன தமிழ் இந்துவா ..?. அப்புறம் தெலுங்கு இந்து ,பஞ்சாபி இந்து என்று அழைக்க படுவார்களா ..? அப்படி ஒருமுறை தன்னை தமிழ் இந்து என்று அழைக்கும் போதுதான் தனிமை படுத்த படுதலை உணர முடியும்.

உண்மையாக அவர்கள் சார்ந்த கொள்கையோடு அழைக்க படுவார்களேயானால் அது இஸ்லாமிய தமிழர்கள் என்ற குறியீடே சரியானதாகும்.
சரி இந்த குறியீடை இஸ்லாமியர்கள் எப்படி அணுகுகிறார்கள் .. ஒவ்வொரு இஸ்லாமியனும் தான் சார்ந்த கொள்கைக்காகவே தனது வாழ்வை முன்னிறுத்தும் தன்மையில் இருப்பதால் இதை ஒரு பொருட்டாக பாப்பதில்லை என்று எண்ணுவதா .. அல்லது மனதளவில் இந்த சமூகமும் தன்னை தனிமை படுத்தி கொண்டே இருக்கிறதா தெரியவில்லை .

இஸ்லாமிய கொள்கை உடைய அரபியர்கள் தங்களை அரபி என்று அடையாளப்படுத்தலாம் அவர்களை நீங்கள் அவ்வாறு அடையாள படுத்தலாம் ,மிஸ்ரி என்று எகிப்தியர்களை சொல்லலாம் ,பாலஸ்தினி என்று சொல்லலாம் அவ்வாறு அழைக்க படுதல் இஸ்லாம் தோன்றிய காலம் முதல் உள்ள பழக்கம் தானே .. இன்னும் அவர்கள் தங்கள் குலத்தை கூட அடைமொழியாக சேர்த்து கொள்வது உண்டு . இதனால் எந்த ஏற்ற தாழ்வையும் இஸ்லாம் போதிக்க வில்லை அரபியரும் அரபியல்லாதோரும் எந்த வகையிலும் உயர்வு தாழ்வாற்றவர்கள் என்பதே இஸ்லாம் போதிக்கிறது . மனிதனின் நன்னடத்தை கொண்டே உயர்வு தாழ்வு போதிக்கிறது . எனவே இஸ்லாமிய சமூகமும் தான் வாழும் பாரம்பரியத்தை தன்னுள் அடையாளமாக்கி கொள்தல் தவறன்று.

இஸ்லாமிய தமிழர்கள் என்ற பதத்தால் அழைக்க படுதலே ஒரு ஒன்றுபட்ட உணர்வை நம் மண்ணில் தோற்று விக்கும் . சரி தலைப்பிற்கு வருவோம் ..
இஸ்லாமியதமிழர்கள் பொங்கல் கொண்டாடுகிறார்களா இல்லையா ... இது பற்றி விவாதிப்பதற்கு முன் பொங்கலுக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பு என்ன .. தமிழர்கள் தை மாதத்தில் மட்டும்தான் பொங்கல் கொண்டாடுகிறார்களா ... இப்போது நாம் கொண்டாடும் பொங்கல் உண்மையிலேயே நம் பாரம்பரிய பொங்கல் தானா ..என்பது பற்றிய தகவல்களை அடுத்து வரும் தொடர்களில் பார்ப்போம் ..

எழுதியவர் : sindhaa (4-Nov-14, 9:17 pm)
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே