நீர்த்துப் போன நீர்த்தேடல்

உப்பாற்று ஓடை...
.................................
உப்பாற்று ஓடையில்
வளர்ந்திருந்த
புதர்களுக்கிடையில்
தத்தளித்து மூழ்குகிறது
நீர்..
.......

தன் சதைகளை வெட்டி
உண்டுவளர்ந்த
கட்டிடங்களின்
கழிவுநீர்களையும்
வாஞ்சையோடு
ஏற்றுக் கொள்கிறது..ஆறு..
....
தெளிந்த நீரும்
துள்ளும் மீனும்
நாணலும் பூக்களுமாய்
இருந்த மனதுகளில்
கழிவுகளும்
விசப்பூச்சிகளும்
துர்வாடையும்தான்
மிஞ்சியுள்ளன..
இப்போதும்
சொல்லிக் கொண்டேஇருப்போம்
ஆற்றுக்கும் ஆளுக்கும்
என்ன தொடர்பு
இருந்துவிடப் போகிறது..?
......
கட்டாயம் மழைக்காக
அழுதுகொண்டும்
தொழுதுகொண்டும்
இருங்கள்
உங்கள் குப்பைகளைக் கழுவ
நீர்வேண்டுமல்லவா...

எழுதியவர் : sindha (17-Jan-16, 10:49 am)
பார்வை : 87

மேலே