கனவுகளுக்குளே வாழ்ந்திடவா....

உதிக்கவும், மறையவும்
மறக்காத சூரியனே...
உனக்கொரு நாள் சுக்கு
காபி போட்டு தரவா......!!!!!

வளர்ந்தும் தேய்ந்தும்
தேய்ந்தும் வளர்ந்தும்
வாழும் வட்ட நிலவே-நீ
வருந்தாமல் இருக்க
வாடகைக்கு வேறு நிலவொன்றை
நிறுத்திவிடவா............!!!!!!

இவ்வுலக உயிர்கள் சுவாசிக்க
நாசிக்குள் நிதமும்
ஓடி ஓடி உழைக்கும்
காற்றே உன் வியர்வை
கொஞ்சம் துடைத்திடவா .....!!!!

மலையின் மீது உதித்து, வீழ்ந்து
படர்ந்து , ஓரிடத்தில் நில்லாது ஓடும்
அருவியே உனக்கொரு
வீடுகட்டி தரவா...!!!!!

நீலவண்ண நிறத்தில் மட்டுமே
உன் உருவம் காட்டும் மேகமே
உனக்கொரு வண்ண சேலையொன்று
வாங்கி கட்டி விடவா....!!!!!

மலர் தேடியே நாளும் ஓடியே
பூக்களில் தேனெடுக்கும் தேனியே
உனக்கொரு வரைபடமொன்று
வரைந்து தரவா....!!!!

பிரபஞ்ச அழகையெல்லாம் காணாது
ஓரிடத்தில் ஒற்றை காலில்
வலியோடு நிற்கும் மரமே
உனக்கொரு மாற்று காலொன்று
மகேசனிடம் வாங்கி தரவா.....!!!!!

நிமிர்ந்தே நின்று முதுகொடிந்த
மலைகளே படுத்துறங்க
பட்டுகம்பளமொன்று பக்கத்தில்
விரித்திடவா ....!!!!!!

இச்சேவையனைத்தும் செய்திட
சேவகியாய் நானும்
வந்திடவா......
இயற்கையின் சூழ்ச்சியை
மாற்ற இயலா
இக்கனவுகளுக்குளே வாழ்ந்திடவா......


-PRIYA

எழுதியவர் : PRIYA (16-Jan-13, 8:00 pm)
பார்வை : 144

மேலே