கோபம் மனிதனின் சாபமா....?

எனக்குள் இருந்து
எங்கிருந்தோ வந்து
என்னை அறியாமல்
என்னுள் நுழைந்திங்கு
என்னென்னமோ செய்திங்கு
எச்சில் தெரித்தெழும்
எண்ணற்ற வார்த்தைகளால்
எதிரில் நிற்கும் மனதினை
எரித்து சாம்பலாகி விடுகிறாய்....

சில நேரமே நீடித்து
சிந்திக்க விடாமல்
சிந்தையை மறைத்துவிடுகிறாய்
பல பிரச்சனைகளை
பறைகொண்டடித்து
பக்கத்தில் நின்று
பாங்காய் நீயும் சிரிக்கின்றாய்....

உன்னை கட்டுப்படுத்த
முயன்றிங்கு
முடியாமலே
உனக்கிங்கு அடிமையாகியே
பல நல்ல உள்ளங்களை
சில நேரங்களில்
பதம் பார்க்கவைக்கின்றாயே....

அடியெடுத்து வைத்தாலே
அழகிய முகமிங்கு
அகோரமாய் மாறும்மிங்கு
அஷ்டகோணலாய் அதிருமிங்கு
அறிவை ஆட்கொண்டே
வேடிக்கை பார்க்குமிங்கு....

பலர் குடிகெடுத்த பாவி
குணம் எனும் கோவிலில்
குடியேறிய நீயொரு ஆவி..
நீவந்தாலே தொலைந்து போகுமிங்கு
அமைதியின் சாவி....

மனித மனங்களுக்குள்
மறைந்து,
செயல் நிலையால் விளைந்த
சூழ்நிலை கண்டு
சுற்றம் மறந்து
வெடித்து சிதறி விடும்
கோபம் என்ன மனிதனின் சாபமா....???

-PRIYA

எழுதியவர் : PRIYA (18-Jan-13, 11:53 pm)
பார்வை : 173

மேலே