எங்கே இருந்து வந்தாயடா?

எங்கே இருந்து
வந்தாயடா!?
எனை கொண்டு
சென்றாயடா!

உடல் மட்டும் இங்கே விட்டு
உயிரை ஏன்
எடுத்து சென்றாய்..!?

உன் நினைவை
எண்ணி, எண்ணியே,
ஒவ்வொரு விடியலும்
தொடங்குதே..!

எதிர்படும் அனைவரிடமும்
உன் சாயலை
மனம் தேடுதே..!

உள்ளே அழுது,
வெளியே சிரிக்கும்,
வேடிக்கைகள் போதுமடா..!

காரணமின்றி அழ வைக்கிறாய்..!
நொடிபொழுதில் சிரிக்க வைக்கிறாய்..!

மாறிவரும் வானிலையாய்..
என் மனமும் ஆனதடா..!

உன் நினைவுகள் தரும்
ரணங்கள் போதுமடா..!

பல நாள் கனவை,
ஒரு நாள் நினைவாக்க
நீயும் வருவாயா?

நீ பிடிக்கவில்லை என்று
சொன்ன பின்பும்
பிடிவாதமாய் காத்திருக்கிறேன்..!

என் நினைவுகள் ஒருநாள் உன்னை என்னிடத்தில்
கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலே..!!!

எழுதியவர் : நிஷாந்தினி.k (19-Jan-13, 12:37 pm)
பார்வை : 285

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே