அருமை பொண்டாட்டி ..
தனித்திருப்பது
எத்தனை கடினம் ..
நீயில்லாத போது
உணர முடிந்தது ...
கேட்டதும் காபி வரும் ..
கேட்காமலேயே
விரல் சொடுக்குவாய் ..
பசியறிந்து பரிமாறுவாய் ..
ஆடை திருத்தி - என்னை
அழகு பார்ப்பாய் ..
அடிக்கடி
உதட்டுக்கே வலிக்காமல்
ஒத்தடம் தருவாய் ..
கோபமாய் பேசினாலும்
கொஞ்சியே அடம் பிடிப்பாய் ..
பைக் சத்தம் கேட்டதும்
பள்ளி குழந்தையாய் ஓடிவருவாய் ..
மல்லிகை பூவோடுவந்தால்
மடியிலே தஞ்சம் கிடப்பாய் ..
மறந்து விட்டால் - இரவில்
மௌனம் சாதிப்பாய் ..
வெட்கம் மறந்து - என்னை
விரும்பி அழைப்பாய் ..
வேகம் காட்டினாலும் ..
வேண்டும் என்றே சிரிப்பாய் ..
புத்தகம் போல - என்னை
புறமுதுகில் சுமப்பாய் ..
புத்தனை போல என்னை - உன்
முந்தியில் முடிப்பாய் ..
நீ அம்மா வீட்டுக்குப்போய்
ஆறு நாளாச்சி ..
அவசரமா வந்திடுடி - என்
அருமை பொண்டாட்டி ..