காதலைச் சொல்லடி
ஒரு முறை ஒரு முறை
காதல் காதில் சொல்வாயா
அடி காமன் செய்த சிலையே
உனை காதல் செய்கின்றேன்….
ஒரு மின்னல் போலே கண்ணில்
பட்டு ஏதோ செய்கின்றாய்....
காயம் பட்ட நெஞ்சத்திற்கு
மருந்தாக வந்த பெண்ணே …
காதல் தீயை கையிரல் கொண்டு
காற்போல வந்த பெண்ணே ….
உன்னை பார்த்த பின்பு
மீண்டும் ஒரு முறை
நான் பிறக்கிறேன்….
மிதக்கிறதே கால்கள் தரையை விட்டு
துடிக்கிறதே நெஞ்சம் விட்டு விட்டு
விழி அசைவில் உன்தன் பார்வைப் பட்டு
உன் வார்தைகளும் கவிதையாய் தோன்றிடுதே….
அடிகடி உன்தன் பேர்ச் சொல்லி
என்னுடைய பேரும் மறக்கிறதே….
நிலவில் உன்தன் முகம் பார்த்து
என் காதலும் மெல்ல நகர்கிறதே….
அழகே பெண்ணில் பேரழகே…
அழைதிடு என்னை உன் அருகே ….
வாழ்திடுவேன் வாழ்திடுவேன்
என் இதயம் உனக்கே தந்திடுவேன்….
அன்பே என் காதலை ஏற்பாயா?
உன் விரலிடையில் என் விரல் கோர்பாயா?…
யாரும் பார்திட முடியாமல்
கனவுக்குள் காதலைச் சொல்வாயா?…
காதல் செய் காதல் செய்
களங்கம் இல்லாமல் காதல் செய்
சத்தம் இல்லாமல்
நுழைந்திட்ட வழியும் தெரியாமல்
சுவாசிக்கும் காற்றுக்குள்ளே நீ
என் உயிராய் கலந்தாயே….
என்னோடு தான் நானுமில்லை
நீ என் பக்கம் நெருங்கி வந்தால்
பிடித்ததே பிடிக்கின்றதே
இந்த காதலும் உன்னாலே!!!!