தேடிக்கொண்டேயிரு..
ஒவ்வொரு இரவும்
நம்பிக்கையோடு தான்
விடிகிறது ..
வெற்றியா.. தோல்வியா..
விடை உன்னிடம் இருக்கிறது ...!
தடைகள் இல்லாத
மலைகள் தரணியில் இல்லை ..
நீ ஆள்வதும் ..வீழ்வதும் ..
உன் அறிவில் இருக்கு ..!!
உயர பறந்தால் தான்
நீ பருந்து ...
உடனே விழுந்தால்
நீ பஞ்சு ..!!
ஓடு...
வெற்றியின் விளிம்பு வரை ..!!
தேடு
விடியலின் வைகறை ...!!
முடியாதென்று முடங்காதே ..
முயன்று பார்..
புயலும் உனக்கு(ள்) அடங்கும் ..!!
ஒருநாளும்
போதுமென்று புதைந்து விடாதே ...
தேடிக்கொண்டேயிரு
வாழ்வு திகட்டும் வரை ...!!!