உண்மைதான் இதுவே !

எழுதுவது எனக்காக
எழுத்துக்களோ உனக்காக!
உழுவது எனக்காக
உழுத நிலம் உனக்காக!
பால் கறப்பேன் எனக்காக,,,
கறந்த பாலோ உனக்காகக..!
பூத்த மலர் தனக்காக..
பூ வாசமோ நமக்காக!
சுய நலத்தில்
பொதுநலமும்..
பொதுநலத்தில்..சுய நலமும்
எங்கும் உண்டு!
இல்லை என்று சொன்னாலும்..
இருக்கு என்று கொண்டாலும்
சுத்தும் பூமியில்
சுத்தமான உண்மைதான் இதுவே !