நீ நீயாக இரு !!!

நீ நெருப்பாய் இரு
பொறாமை குப்பையை
பொசுக்குவதற்க்கு

நீ ஆகாயமாய் இரு
கெட்டவனுக்கு எட்டாதவனாய்
இருப்பதற்கு

நீ நதியாய் இரு
சமுதாயத்தை முன்னோக்கி
இழுத்துச் செல்வதற்கு

நீ கடலாய் இரு
நல்லவை, தீயவை
ஆதரித்து ஒற்றுமை பேண

நீ மரமாய் இரு
மற்றவர்களுக்கு
கைம்மாறு கருதாமல் உதவுவதற்கு

நீ நிலவாய் இரு
இருண்டு போன சமுதாயத்திற்கு
ஒளி கொடுக்க

நீ நீயாக இரு
நாளை உலகம்
உனக்காவதற்க்கு

எழுதியவர் : (21-Jan-13, 11:38 am)
பார்வை : 802

மேலே