உழைப்பு

உப்பின்றேல் சுவையாது உணவு
உழைப்பின்றேல் களைஏது vazhvil
உழைப்பவனே உலகில் பிழைப்பவன் !
உழைப்பு !!!!!....
பிறப்பு முதல் இறப்பு வரை
உண்மையில் விதம் விதம்
வாழ்கை சொல்லுதே தினம் தினம் !
#####
தாயின் கடும் உழைப்பில்
பிறக்குது சிறு சேய்,
அது ....
புள்ளிமானாய்
துள்ளி விளையாட
நடை பழகுவது உழைப்பினாலன்றோ !
###
கல்விக்கூடம் சென்று -- ஆசான்
கற்பிக்கும் பாடம் பயில
உழைப்பு வேண்டுமன்றோ ?
###
கிடைக்கும் வேலையில்
மகிழ்வாய் உழைத்தால்
சமூகம் தரும்
தங்க நாற்காலி !
###
உழைத்தலில் சோர்ந்தவன்
நோய் பல சேர்ந்தவன் !
வயது ஏற ஏற
அனைத்தும் குறையும்
####
முதுமை நமக்கு ஓய்வு காலம்
என் கடன் பணி செய்து கிடப்பது
என இளமையில் யோசித்தால் -- யாரிடத்தும்
யாசகம் வேண்டாம் முதுமையில் !
####
குருதி சுண்டும் வரை
வியர்வை நிலம் சிந்தி
உழைத்திட
உறுதி எடுத்திட்டால்
உயர்ந்திடலாம் நாம் வாழ்விலே !