கண்ணீர் கொண்ட நிலவு...

கனவிலும் உன் நினைவுகள் என்னுள் பாய்ந்திருந்தன...
காலையில் கன்னத்தில் கண்ணீர் ஓடைகள் காய்ந்திருந்தன...
குளிர்ந்த நிலவு இருந்தும், குடை போல் இமைகள் இருந்தும்.., இரவில் இருவிழி வியர்த்ததேன்...
கண்ணீர் கொண்ட நிலவாய் என் கண்கள்... இரவில் விழித்து, என் கவிதையில் சில வரிகளை கண்ணீராய் மொழிபெயர்த்ததேன்....
நிலவு வரும் நேரங்களை, களவு செய்யும், அவள் நினைவுகளுக்காக... கண்ணீரை செலவு செய்யும் என் கண்ணே இன்று உறங்கிவிடு...
நாளை மீண்டும் உருகிவிடு...

எழுதியவர் : சாய நதி (23-Jan-13, 1:03 pm)
சேர்த்தது : சாய நதி
பார்வை : 99

மேலே