வாழ்க்கை

நெடும்தூர பயணம் தனிமையில் இரு பாதங்கள்
முள் தரும் வலியோடும்
கல் தரும் காயத்தோடும்
பூ தரும் சுகத்தோடும்
நதி தரும் வருடலோடும் காலங்கள் நகர்ந்தன

சேர்ந்து போக ஜோடி பாதம் வந்தது
ஒருமித்த கருத்து ஒரே நோக்கம்
இரு ஜோடியை நட்பாய் மாற்றியது

இப்படி ஒரு நட்பா என வியந்தவர் பலர்
பொறாமை கொண்டோர் சிலர்

கண் பட்டதா? கருத்து வேறுபட்டதா?
முறித்து கொண்டது நட்பை

பயணம் முடிய வெகுநாள் உண்டு
அதுவரை எதுவும் நிரந்தரம் இல்லை
என் இதை வாசிக்கும் நீ கூடத்தான்!

எழுதியவர் : ச. மனோஜ் (25-Jan-13, 3:30 pm)
சேர்த்தது : SManoj
Tanglish : vaazhkkai
பார்வை : 184

சிறந்த கவிதைகள்

மேலே