அழியாத நட்பு !

ஆருயிர் தோழி!

என் வாழ்க்கை என்னும்
புத்தகத்தில்
பதினெட்டாம் பக்கத்தில்
இருந்து
எழுதபட்டவள்
நீயடி . . !

அதுவரை . .
வெற்றிடத்தை மட்டுமே
பார்த்த எனக்கு
மறந்தே போனது
வெற்றிடம் என்றால்
என்னவென்று. . !

உன் அன்பில்
நான் உருகியபோதும்
அழிந்து போகவில்லையடி
உனது பெயர். . . !

அழிக்க முடியாத
மை கொண்டு
எழுத பட்டதென்று
நினைத்து விடாதே. . !

அது . .

என்றுமே அழிக்க
முடியாத
நம் நட்பை கொண்டு
எழுதபட்டதடி. . !

எழுதியவர் : கிருபா.s (26-Jan-13, 9:49 pm)
பார்வை : 677

மேலே