போராடப்போகிறேன் வருகிறாயா ..?

தொடர்ச்சியான வரட்சி ....
மறு புறம் விவசாய கடன்
நதிநீர் பிரச்சனை ....
நியாய விலை இன்மை ...விவசாயிகளை
என்ன செய்ய சொல்லுகிறீர்கள் ...?

நாங்கள் பொறுத்தது போதும் ..
போராடப் போகிறேன் -நான்
நாளை முதல் என் மனைவியும் பிள்ளைகளும்
வீதிக்கு வருவார்கள் ..நிச்சயம்

எனக்கு ஒரு துப்பாக்கி தாருங்கள்

அரசுக்கு எதிராக போராட இல்லை ...!

ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து
நெல்லு மூடியையோ ..ஆக குறைந்தது
ஒரு சோற்று பானையை திருடுவதற்கு ..!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (27-Jan-13, 11:58 am)
பார்வை : 169

மேலே