நீ இல்லை... நானும் இல்லை..

நீ என்னை நேசித்த நொடி முதல்
நானும் உன்னை நேசிக்கிறேன்
இன்று நீ எங்கு போகிறாய்
என் காதலையும் உதறி போகிறாய்
நீ இல்லையேல்
நான் நீரில்லா மீன் போல்
என் உடல் மட்டும் நடை பிணமாகும்
என் உயிர் உன்னை தேடும்
நீயில்லா வாழ்வை விரும்பவில்லை
உன்னை மறப்பது என்பது முடியாத வேலை
உன் வெறுப்பை தாங்கும் தைரியமில்லை
உன் அன்பையாவது எனக்காக விட்டு செல்