............எதிர்பார்ப்பு...........

எதிர்பார்ப்புகள் எப்போதும்,
உத்தரவு வாங்கிக்கொண்டு உள்ளே நுழைவதில்லை !
பார்த்தேன் பிரியப்பட்டேன் !
பார்த்தாய் ஆசைப்பட்டேன் !
ரசாயனமாற்றங்களின் காரணகாரியங்கள் தெரியாது !
என் அறிவுக்கு சொன்னாலும் புரியாது !
உனக்கு நான் அவ்வளவு பரிட்சயமில்லை !
உன் உறவுக்கு நெருக்கமென்ற செருக்கும் வாய்க்கவில்லை !
என்றபோதும் எதிர்பார்கிறேன் உனை என் அன்றாடங்களில் !
காரணம் !!
எனக்குள்ளும் வந்தமர்ந்துவிட்டது !
வளைக்கமுடியாத எதிர்பார்ப்பு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (29-Jan-13, 10:08 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 84

மேலே