நான்காம் பிறை
முடிந்திட்ட முத்தாரங்கள் மூன்றும்
முழுமதியின் மூன்று பிறைகள்
முக்கனியின் மூன்று சுவைகள்
முழுமனதாய் வெளிவந்த பதிப்புகள் !
அளித்திட்ட அன்பான ஆதரவால்
வாழ்த்திட்ட வைர நெஞ்சங்களால்
தொடங்கிட்ட அடுத்த தொகுப்பிது
மலர்ந்திட்ட நான்காம் பிறை இது !
பல்வேறு சிந்தனைகள் கொண்டது
படைத்திடும் எவருக்குமே சொந்தமது !
கிட்டிய பாராட்டில் நினைந்திட்டேன்
குட்டிய குறைகளில் உலர்ந்திட்டேன் !
சிந்தையின் சிதறலால் சிலிர்த்திட்டு
விந்தையின் வியப்பால் விழித்திட்டு
சீற்றங்களையும் சிந்தனைகளையும்
சீரோடு அளித்திட ஆரம்பிக்கிறேன் !
( முதல் மூன்று பதிப்புகளும் வெளிவந்து
அடுத்து நான்காம் பதிப்பு விரைவில்
வெளிவரும் என்ற நம்பிக்கையுடன்
தொடங்குகிறேன் இன்று முதல் )
பழனி குமார்