சொல்லாத காதல்
என்னையும் கூட உனக்கு தெரியும்
உன்னையே யோசித்து கொண்டு இருக்கும்
எனக்கு உன்னை மட்டுமே தெரியும்!
நேசித்த பின்னும் யாசிக்க முடியவில்லை
உன்னால் ! உன்னை யாசிப்பதை தவிற
வேறு ஏதும் முடியவில்லை என்னால் !
நீயோ காரணம் தேடுகிறாய் என்னை
சந்திக்க நானோ இன்னும் நேரம்
தேடுகிறேன் உன்னையே சிந்திக்க !!
காதல் அதை சொல்ல வார்த்தைகள்
ஆயிரம் உண்டு ஆனால் சொல்லாமலே
சுவைகண்டு வாழும் இன்பமும் உண்டு !
சொல்லாமலே வாழ்ந்தால் ஒருதலை காதல்
ஆனால் சொன்னாலும் வராத கனவுகள்
இன்பங்கள் என்னுள் உறைந்து கிடக்கும் ...