செழிப்பே நீ எங்கே !!!
கண்களில் மேன்மையும்
தேகத்திற்கு தூய்மையும்
வாழ்விற்கு செம்மையும் மென்மையும்
தரும் செழிப்பே நீ எங்கே ?
மக்கள் தொகை பெருகியதாலும்
மக்கள் மாக்களாய் மாறியதாலும்
பருவமழை தவறியதாலும்
உன் வளர்ச்சி குறைந்துவிட்டதா ?
"வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் " என்பது
மறைந்து " வீடு கட்ட,அலுவலகங்கள் உயரமாய் வடிவமைக்க மரத்தை வெட்டுவோம் " என்று
சொல்லும்படி நிலைமை மாறியதே அதனால்
உன் மலர்ச்சி மறைந்துவிட்டதா ?
வாகனங்கள் பெருகி வர
அவை செல்ல பாதைகளும் அகன்று வர
தூய்மையான நதிகள் மாசுபட்டு பழுதடைந்துவர !
ஆங்கில மருந்துகளுக்கு மக்கள் அடிமையாகி வர !
உன் வலிமை இதனால் குன்றி வருகிறதோ ??
தேடுகிறேன் ஒவ்வரு நாளும் ! ஒவ்வொரு நாட்டிலும் ! ஒவ்வொரு வீட்டிலும் ! இன்னும் சொன்னால்
காட்டிலும் ..! செழிப்பே நீ எங்கே.....!