தமிழையும் சுவைத்து பார் !...

சங்கம் வைத்து உன்னை வளர்த்ததும்
பாடி பாடி பரிசில் பெற்றதும்
புராணங்களும் இதிகாசங்களும் அதிகமாய் தொகுத்ததும்
கொஞ்சியும் கெஞ்சியும் சீறியும் சினத்தும்
கயின்றும் கதைத்தும் பதைத்தும் உன்னை
செந்தமிழாய் வளர்த்தது இதற்கு தானா?


எங்கோ ஒரு மூலையில் தொலைக்கத்தானா
உன்னை பேசினால் வேதாந்தம் உன்னால்
பேசினால் அறிவிலி தமிழே இங்கும்
உனக்கு வந்த நிலையை கண்டாயா
ஏனோ பெயர் இன்னும் மாற்றப்படவில்லை
தமிழ்நாடு ஆனால் தமிழ் எங்கே?


மற்ற மொழிகளின் சுவை உன்னில்
கலக்கவில்லை தமிழா பாற்கடலில் கடையும்
அமிர்தம் எதற்கும் ஒப்பல்ல இத்தரணியில் !
உன் அன்னையை ஊமையாக்கிய பின்
நீ பிதற்றும் சொற்பொழிவுகள் எதற்கு ?
தமிழையும் லயித்து சுவைத்து பார் !..

எழுதியவர் : வீரா ஓவியா (2-Feb-13, 11:09 am)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 99

மேலே