மூணு மதத்துகாரனும் வழக்க போடுறான்-இத பாரதி கண்டா காரி துப்புவான்

மூணு  மதத்துகாரனும் வழக்க போடுறான்-இத பாரதி கண்டா காரி துப்புவான்

விதை நெல்லை விதைத்தவன்
வாழ்வெல்லாம் சந்தி சிரிச்சு
நாளாச்சு -முந்தி கொண்டு
போரிட நாதியில்ல இவ்வூரினில !

பாலாறு தேனாறு இப்படி
பலஆறும் அறிவியல் கோளாறால்
நாறிடுச்சு -அதுல பாதி
மறஞ்சிடுச்சு !
இத தட்டி கேக்க ஆள் இல்ல !
தர்ணா செய்த நாளில்ல !

விளை நிலத்துகேல்லாம்
விலை வைக்கிறான் -அதில்
வீடு கட்டி வாழுறான்
வினா தொடுக்க ஆளில்ல
வீதியில் இறங்கிபோராட மனமில்ல!

இருப்பவன் எல்லாம் கிறுக்கன் போல்
அங்கும் இங்கும் சுத்துறான் !
ஜாதி மதம்னு வந்துபுட்டா
மறியல் பண்ண கிளம்புறான் !

மதியம் சோத்துக்கு வழிஇல்ல
மதத்த சொல்லி கத்துறான் !

மரத்த எல்லாம் வெட்டுறான் -அவன
மறித்து வெட்ட அஞ்சுறான் -ஆனா
ஜாதிய வச்சுமட்டும் வெட்டுறான் !

கடல் அலைக்கு மத்தியில
களவொன்று நடக்குது -அது தமிழ்
ஈழத்த ஈனமா நினைக்குது !
உயிர் கொலையும் புரியுது
மீளா துயரில் ஆழ்த்துது !

மீசைவெச்ச தமிழனெல்லாம்
மிதிபட்டு சாகுறான் !
மான் போன்ற தமிழச்சியோ
மானபங்க பட்டு துடிக்கிறா -நம்மநாட்டு
மத்தியிலோ மௌனம் மட்டும் மிஞ்சுது !

தமிழகாக்க வேணாம் நீ -அது
தரமிழந்து நாளாச்சு !

தமிழினத்த காக்க வேணாம் நீ -அது
தல குனிஞ்சு போயாச்சு !

சகமனுசன காக்க வேணாமா-கொலை
சாவ தடுக்க வேணாமா !

வேதனை கண்டு பொங்கல
வெதும்பி புரட்சி பன்னல
கொதித்து கொஞ்சம் குமுறல
நிஜத்த கண்டே அஞ்சல -திரைப்பட
நிழல பாத்து கொதிக்கிறான் -மூணு
மதத்துகாரனும் வழக்க போடுறான் !
மதத்த ஒட்டி நிக்கிறான்
சாதிய சொல்லி ஒதுக்குறான்
மனுஷன ஏற்க மறுக்குறான்
இத பாரதி கண்டா காரி துப்புவான் -நம்ம
படச்சவன் கண்டா சிரிச்சு திட்டுவான் !

*************************************************************
கருத்துகளை பகிருங்கள்
கருத்தடை இருக்கட்டும்
கருத்துக்கு தடை வேண்டாம் -நற்
கருத்துகள் நாட்டின் சொத்துகள் - நாறும்
கருத்துகள் நாட்டின் வெத்துவேட்டுகள் !

ஆவேச கருத்துகள் கூட நிகழட்டும்
ஆசுவாச சிந்தனையை வளர்க்குமானால் !

**************************************************************
அன்புதோழன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (4-Feb-13, 5:34 pm)
பார்வை : 163

மேலே