ஊனஉடல் எதற்காக ?
வலியைக்கூட தாங்கக்கூடும் ஆனால்
உன் நினைவுகள் நெஞ்சைத
தைத்துக் கொண்டே கொல்லுதடி!
ஏன் எனக்குள் வந்தாய்!
திரும்பிச் செல்லென சொல்லவில்லை
என்னையும் கூட்டிச் செல்லடி!
நீயின்றி நான்படும் துன்பங்களை விட
நரகத்தில் கொதிக்கும் எண்ணையில்
மிதக்கும் நிலைகூட சுகம்தான்!
உயிரையே உருவிச் சென்றபின்
இந்த ஊனஉடல் எதற்கடி??