பொன்மொழிகள் பாகம் -2

1) தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள்
குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள்
தாயன்பைப் போல எல்லையிலா அன்பை
உலகில் தோன்றிய உயிரினத்தின் மீது காட்டுங்கள்.

2)சொற்களுக்கு ஐந்து குறிகளிருந்தால் அவை தீயசொற்கள் அல்ல, நல்ல சொற்கள். அறிஞர்களால் புகழப்பட்டு போற்றப் படுபவை. எந்த ஐந்து? அவை சரியான நேரத்தில் சொல்லப்பட்டவை, வாய்மை உடைத்தவை, அமைதியாகப் பேசப்பட்டவை, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்பவை, அன்போடு பேசப்படுபவை.

3) ஆழமான ஏரி தெளிவாகவும், அசைவற்றும் இருப்பதைப்போல, அறிவுடையோர் போதனைகளைக் கேட்கும் போது முற்றாக அமைதியடைகிறார்கள்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (6-Feb-13, 9:01 pm)
பார்வை : 347

மேலே