ஒரு தாயின் சபதம் பாடல் வரிகள் டாக்டர் .கிருதியா

அன்பு அம்மா
அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன்போல்
இல்லை அம்மா
அன்பு அம்மா
அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன்போல்
இல்லை அம்மா
தொப்புள் கொடியால்
ஒரு தோட்டம் அமைத்தாய்
பிள்ளை கனியாய் என்னை
படைத்தாய்
உன் உயிர் கரைத்து
என் உடல் வளர்த்தாய்
ஒன்றல்ல நீ செய்த
தியாகம்
நான் வெல்வதே
ஒரு தாயின் சபதம்
அன்பு அம்மா
அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன்போல்
இல்லை அம்மா
ரத்தத்திலே பால் எடுத்து
முத்தத்திலே மூச்செடுத்து
ஊட்டினாய் காட்டினாய்
உலகத்தையே
பள்ளிக்கூடம் நான் படிக்க
சுள்ளிகட்டை நீ சுமக்க
வெந்து நீ வெந்த சோறு
போட்டாயே
உன் இடுப்போரமாய்
நான் இருந்தாலென்ன
அம்மா வெகு தூரமாய்
எங்கோ போனாலென்ன
என்னை நினைச்சு
உருகும் தாயே
உந்தன் சபதம் முடித்து வருவேன்
அன்பு அம்மா
அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன்போல்
இல்லை அம்மா

எழுதியவர் : ஒரு தாயின் சபதம் பாடல் வரி (6-Feb-13, 9:50 pm)
பார்வை : 511

மேலே