நேர்முக காதல் - க
சகசமாய் நானுலா வந்தேன் சதாதினம்
சுகிதமாய் அலுவல் புரிந்தேன் போகின்ற
காகிதப் பக்கங்களை புரட்டிய பொழுது
போகிதனாய் புல்லரித்த பக்கமது காதலூறும்
வாகிதனாய் பண்பட்ட தமிழ்முகம் தருமொழி
பாகிதமாய் கவிமிக்க வார்த்தைகளை சேர்த்தேன்
கூவி அழைத்த மேகமது சொன்ன
சேதி இழைத்த சூரனது தூரலும்
வீதி தோறும் விழைந்த கட்டிடமும்
வேதிய மாற்றத்தில் வளைந்த மனத்தடமும்
விரசமிலா பரசுகத்தில் சுற்றி வந்தேன்
நரகமிலா சுயசுகத்தில் தொற்றி வந்தேன்
நிச்சயமாய் நித்திரை எனக்கில்லை நச்சரிக்கும்
நைந்தமிழும் தீரப் போவதிலை உச்சரிக்கும்
மெய்யகமும் தாகமுறா தேடுமுகம் தேடுமது
செய்யுகமும் தோகமுற நேர்நிலையில் தொடுமது
அசையாத சீர்முகமாய் தன்னிகர் தானாகி
திசையெலாம் தேரசையும் பாரீர் பாரீர்