அம்மா எனக்கு வேணும்...

பாசம் இல்லா உலகத்துலே
பட்டாம் பூச்சி நானோ...

இல்லை வற்றிப்போன குளத்தினிலே
நீரைத்தேடும் மீனோ..

கேட்டு நமக்கு கிடைத்து விட்டால்
பாசம் கூட வீனோ...

காசு கொடுத்து வாங்கினாலும்
அது கானல்நீரு தானோ...

பறவை கூட ஊட்டுதம்மா
தன் குஞ்சுக்கு தீனு..

தன் சேயைக்காக்க ஓடுதம்மா
அந்த மறையோடு மானு...

மனிதன் மனசு பாசம் மட்டும்
இன்று மரித்துப் போனதேனோ...

இந்த உலகை விட பெரியதுங்க
அம்மா பாசம் வேணும்

அம்மா அவ போன பின்பு
இந்த உலகம் கூட ஏனோ...

எழுதியவர் : தோழி (8-Feb-13, 12:33 pm)
சேர்த்தது : fahema
Tanglish : amma enakku venum
பார்வை : 204

மேலே