என் கண்மை

என் கண்மை

நீ ரசிக்க மட்டுமே
என்னில்-
என் கண்ணில்
நான் வரையும்
உயிரோவியம்
என் கண்மை
உனக்காக
நான் அழுதபோதெல்லாம்
என்னை ஏமாற்றி
உனக்காக
கன்னக்குழியில்
காத்திருக்கும்
என் பொய் தோழி ...
கண்மை
கண்ணில் வாழும்
உன்னை
என்னைவிட்டு நீங்கா
வண்ணம் நான் வரைந்த
லக்ஷ்மண கோடு -
என் கண்மை ......


என் தாய்க்கு
நம் காதல்
முன்னமே
தெரிந்துதான் என்னவோ
நான் பிறந்த உடனேயே
இட்டுவிட்டார்கள் கண்மையை
நீ அடிக்கடி
முத்தமிட்டு மகிழும்
என் கண்ணிலும் என் கன்னத்திலும்...

எழுதியவர் : sivagangaa (8-Feb-13, 4:43 pm)
Tanglish : en kanmai
பார்வை : 203

மேலே