கவனமாக இரு களவாட போகிறேன்
கடந்த ஆண்டு காதலர் தினத்தில் உன்னிடம் நான் களவாடிய கைக்குட்டையை தான் இப்போதுவரை என் உயிர் பொருளாக வைத்திருக்கிறேன் .அந்த கைக்குட்டையால் தான் நான் குளித்தபின் என் தலையை துவட்டுகிறேன் .
நீ கேட்கலாம் இந்தப்பெரிய உடம்புக்கு இந்த சின்ன கைக்குட்டை போதுமா ..?
என்று ..
உனக்கு தான் அது கைக்குட்டை அது எனக்கு உன் கை .நான் அதனால் துவட்டும் போது நீ துவட்டுவதாக நினைக்கிறேன் அன்பே ...!
தூங்கும் போது அதை என்முகத்துக்கு மேல் போட்டு விட்டு தான் தூங்குவேன் காரணம்
என்ன என்று இப்போ உனக்கு விளங்கும் எண்டு நினைக்கிறேன் ..
உன் கைக்குடையை நான் போகும் இடமெல்லாம் கொண்டு செல்லுகிறேன் நீ அப்போதும் எனோடு எடுத்து கொண்டு செல்லுகிறேன் நீ என்னோடு எப்போதும் என்னோடு இருப்பதால் ...!
என் உயிர் கைக்குட்டை சேதம் அடையக்கூடாது என்பதற்காக இப்போது இதய அறைபோல் பாதுகாக்கிறேன் அலுமாரிக்குள்
அன்பே இந்த காதலர் தினததுக்கு உன் துப்பட்டாவை களவாடப் போகிறேன் விழிப்பாக இரு .................................!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
