கரை(றை) வேட்டி
காமாச்சி என்னோட கட்சி வேட்டி எங்க ?கூட்டத்துக்கு போகணும்..
உள்ள தான் இருக்கு போய் எடுத்துக்குங்க ..கட்சி ,கொள்கை இப்படியே இருங்க ...கட்சி தான் சோறுபோட போகுது ..பையன் குவைத்"க்கு போய் ஒரு வாரம் ஆச்சு .ஒரு தடவை தான் போன் பன்னான் அத பத்தி எல்லாம் கவலை கிடையாது .
.
ஏண்டி உனக்கு எத்தன தடவ சொல்லி இருக்கேன் கட்சி ,கொள்கை இத பத்தி தப்பா பேசாத ..
எதாவது சொல்லி வாய அடையுங்க..நம்ம கல்யாணத்துக்கு பட்டு வேட்டி கட்ட சொன்னதுக்கு கரை வேட்டி கட்டுன ஆளு நீங்க ..உங்க கிட்ட வாய கொடுக்கறது தப்பு ...
அலைபேசி செல்லமா சிணுங்கியது ....
பையன் தான் போன் பண்றான் ..இந்தாடி நீ பேசி கிட்டு கொடு .
..
ஹலோ....
தம்பி எப்புடி இருக்க ...சாப்டியா..வேலை கழ்டமா இருக்கா ?
...அம்மா நல்ல இருக்கேன் ...அப்பா கிட்ட போன் கொடும்மா..
.
இந்தாங்க உங்க கிட்ட பேசனுமாம் ...
தம்பி எப்படி இருக்கப்பா?
இருக்கேன் ....
என்னடா அலுத்துகுற ..வேலை பிடிக்கலையா ?
அப்படி ஏதும் இல்லபா ...
நீ ஆசை பட்டு தான வெளிநாட்டு வேளைக்கு போன?..
அப்பா நான் வேலை பிடிக்கலன்னு சொல்லவே இல்ல ..
உன்னோட பேச்சு அப்படி தாண்டா இருக்கு ...
அப்பா பிரச்னை வேற ..அதுக்கு உங்க கட்சி கொள்கை தான் காரணம்..
.
என்னடா சொல்ற ?
அப்பா நான் 6வது படிக்கும் போது புதுசா ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிச்சாங்க நினைவு இருக்கா ?
ஏன்டா எங்களோட கட்சியோட கொள்கைல அந்த மொழிய எதிர்கறது ஒன்னு அத எப்படி மறப்பேன்..
அப்பா 6வதுலஹிந்தி படிக்கற வாய்பு...போச்சு ..அதுக்கு அப்புறம் நானா ஹிந்தி வகுப்புக்கு போனேன் அப்பயும் உங்க எதிர்ப்பால நான் போகல ...
சொல்லவந்தத தெளிவா சொல்லு ..நீ என்ன சொல்ல வர ..
அப்பா ..நான் எங்க தங்கி இருக்கேன் தெர்யுமா?நம்ம பக்கத்துக்கு நாட்டுக்காரன் ரூம் தான் எனக்கு .நம்மள பொருத்தவரைக்கும் அவுங்கள எதிரியா தான் பார்க்குறோம் ..அவன் தான் எனக்கு சாப்பாடு சமைச்சி தரான் ..வெளி இடங்களுக்கு அவன் தான் கூபிட்டு போறான் ..எங்க ரெண்டு பேருக்கு உள்ள ஒரே பிரைச்சனை மொழி தான் . ஆங்கிலம் எல்லாருக்கும் தெரியும்"னு நினைக்கிறது தப்பு எனக்கு கீழ 50 பேர் வேலை செய்றாங்க..நான் சொல்றத அவுங்க செய்யணும் ..இங்கயும் மொழி தான் பிரைச்சனை..நம்ப நாட்டு மொழிய தெரியலன்னு சொன்னா இங்க சிரிக்கறங்கா...உன்னோட கட்சி கொள்கை நம்ம வீட்ல பண்ண பிரச்சனையை பர்த்துக ..என்ன மாதிரி எத்தன பேரோ ...சரிப்பா அடுத்த வாரம் பேசறேன் ...வச்சிடுறேன் ..
என்னங்க இதோ இருக்கு உங்க கட்சி வேட்டி...
அத கொண்டு உள்ள வை ..நான் கட்சி கூட்டத்துக்கு போகல ...
ஆச்சரியமா பார்த்தால் கணவனை