எப்படி சொல்லுவேன் !

கனவுகள் பல உண்டு நெஞ்சத்தில் -அதை
உன்னிடம் கூற தைரியம் தான்
இல்லை உள்ளத்தில்...
இத்தனை வருடம் நான் பேசிய மொழி
உன்னை கண்டதும் மறந்துவிட்டதோ !
தாய் மொழியில் கூட வார்த்தைகளை
தேடுகிறேன்,
உன்னிடம் என் தவிப்பை கூற .....
எத்தனை முறை முயன்றாலும்
தோற்று விடுகிறேன் உன்முன் ..........
சொல்லி தீர்த்தால் தீர்ந்துவிடும்
சொல்லத்தான் வார்த்தை இல்லை ........
உன்னை கண்டதும் உதடுகள்
இரண்டும் தந்தி அடிக்கின்றன ,
தொண்டை குழிக்குள் வார்த்தைகள் சிக்கி கொண்டு வர மறுக்கின்றன ,
உன்னை காணும் போதெல்லாம்
என் கண்களில் தோன்றும் தவிப்பைக்கூட
உணர முடியாத -உன்னிடம்
எப்படி சொல்லுவேன்
என் காதலைப்பற்றி !