என் பயணம் தொடரும்

மெளனத்தை கலைத்து
வெகு தூரம் சென்று
திரும்பிப் பார்க்கிறேன்...
உன் நினைவு நெருப்பாகி சுட்டெரிக்க
நீ எங்கே? என் காதலனே..
உன்னை
இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் சற்றே
நினைத்திருக்கலாமென்று.
இனி,
என்னுள் உன் உருவம்,
உன் நினைவு,
என்றும் அழியாது..
தொடரும் நாட்களில்,
இனி, உன்னை,
சுமந்தபடி,
என் பயணம் தொடரும்.*