என்னை பாதித்த சிறுமி
கடந்த வாரம் என் நண்பனின் திருமணம் மகாராஷ்டிரா வில் "நன்டெட்" என்னும் இடத்தில் நடந்தது, இது ஹைதராபாத்தில் இருந்து 250கி.மீ தொலைவில் உள்ளது. நானும்,என் நண்பனும் திருமணத்திற்கு சென்று இருந்தோம், திருமணம் முடிந்த மறுநாள் சென்னைக்கு திரும்புவதற்காக ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் 6.30pm க்கு முன்பதிவு செய்திருந்தோம், அதற்காக "நன்டெட்" இல் இருந்து ஹைதராபாத் செல்ல ரயில் நிலையம் சென்றோம், ஆனால் சரியான நேரத்தில் ஹைதராபாத் செல்ல முடியாத நேரங்களில் ரயில் இருந்தது, இது எங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. பிறகு பேருந்தில் செல்ல முடிவெடுத்தோம், ஆந்திரா அரசின் பேருந்து ஒன்றில் ஹைதராபாத் செல்ல ஏறினோம், அதில் இருகைகள் அனைத்தும் காலியாக இருந்தது, மொத்தம் 6 பேர் மட்டுமே இருந்தனர். முதல் வரிசையில் ஒரு கணவன் மனைவி மற்றும் 4 வயது அழகான குழந்தை அமர்ந்து இருந்தனர், நாங்கள் நடுவில் ஒரு வரிசையில் அமர்ந்தோம்.பேருந்து காலியாக இருபதால் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம்.புதிய மனிதர்கள்,புதிய கலாசாரம்,புதிய இடம் என நடந்தவைகளை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அந்த அழகான குழந்தை ஒவ்வொரு இருகைளும் ஏறி குதித்து விளையாடி கொண்டு இருந்தது. அந்த அழகான குறும்பு விளையாட்டை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தோம். அவள் ஒவ்வொரு இருக்கையாக விளையாடி, கடைசியில் எங்கள் இருகை முன் விளையாடி கொண்டு இருந்தாள். அந்த குழந்தையின் விளையாட்டில் கலந்து கொள்ள ஆசையாக இருந்தது, உனது பெயர் என்ன? வென்று கேட்டேன், அவள் என் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள், ஆனாலும் பதில் இல்லை,என் நண்பன் சொன்னான்,"இது தமிழ்நாடு இல்ல, அவளுக்கு தமிழ் தெரியாது". ஓ! ஆமாம்! பிறகு "what is your name?" என்றேன், அப்போதும் அவள் எங்களை பார்த்து கொண்டே விளையாடுகிறாள்,ஆனாலும் பதில் இல்லை. மீண்டும் நண்பன் சொன்னான் "அவளுக்கு இங்கிலீஷ் தெரியாது, மராத்தி,ஹிந்தி மட்டும் தான் தெரியும் என்றான்". ஓ! என்ன செய்வது? எனக்கு மராத்தி தெரியாது, ஹிந்தி கொஞ்சம் தெரியும். k பரவாயில்லை. "तुम्हारा नाम क्या है?" என்றேன் .திரும்பவும் பதில் இல்லை.அந்த குழந்தை அழகாக இருகிறாள்,அழகா விளையாடுகிறாள்,ஆனால் அவளுடன் பேசுகிறேன், மொழி புரியவில்லை பரவாஇல்லை, ஒரு சைகை கூட செய்யாமல், என்னை கண்டு கொள்ளாமல் விளையாடுகிறாள். எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது, என் நண்பனிடம்
"அழகான பெண்கள் தான் திமிராக இருப்பார்கள்,
இப்போது அழகான குழந்தைகளும் திமிராக இருக்கிறார்களே" என்றேன், மீண்டும் அவளிடம் " what is your name?" என கேட்டேன், திரும்பவும் பதில் சொல்லவில்லை. "என்ன குழந்தை இது? ஒரு மழலை வார்த்தை கூட பேசாமல் " என முனுமுனுத்தேன்.இதனை பார்த்து கொண்டு இருந்த குழந்தையின் தந்தை, எதோ சைகை காண்பித்தார், கவனித்து பார்த்தால், "அவளுக்கு காது கேட்காது, பேச வராது" என்றார்.அந்த நொடியில் இருதயத்தில் இடி விழுந்தது.
ஒரு நிமிடம் உயிர் பொய் வந்ததுபோல் இருந்தது .ஒன்றும் அறியாத அவள் அப்பாவி முகத்தை பார்த்தேன், என்னை அறியாமலே என் கண்கள் கலங்கின, அவளை அனைத்து முத்தமிட்டேன், மிக பெரிய பாவம் செய்துவிட்டேன் என்பதுபோல், என் மனம் என்னை கேள்வி கேட்டு கொண்டே, மன ரண வேதனை அடைந்தேன். "இவ்வளவு அழகையும்,அறிவையும் படைத்த இறைவன், இப்படி குறையுடன் நடந்து கொண்டானே?" சென்னை வந்து சேரும்வரை சாப்பிட கூட மனமில்லை,உணர்வற்றவனாய் வந்து சேர்ந்தேன். இன்று வரை அந்த பாதிப்பில் இருந்து விடுபடவில்லை.. அவள் கூடிய விரைவில் குணமடைய இறைவனை கேட்டுக்கொள்கிறேன்
-shady chawla