மூன்றெழுத்து:-

நினைவில் இல்லை எதுவும்-ஆனால்
நிஜத்தில் தேடுகிறேன்,
தொலைந்தது எதுவோ என்று
தேட தொடங்கினேன்,
கண்ணில் பட்டதெல்லாம்-கருதோடிசைத்தேன்
கண்ணீரும் வந்ததை அறிந்தேன்,
கண்ணீருக்கு காரணம் தேடி-இரவு முழுவதும்
கண்முட மறந்துவிட்டேன்,
கிடைத்துவிடும் போலிருந்தது-ஒரேநாளில்
கிறுக்கன் பட்டம்,
யாரிடமாவது சொல்ல வேண்டும்-சொன்னால்
யாருக்கும் புரிவதில்லை,
தனிமையில் விடைதேட முயன்றேன்
தயக்கமும் மனதில் குடிகொண்டது,
வெறித்தனமாக யோசித்தேன்
வெட்கமும் வந்தது,
முடிவுக்கு வந்துவிட்டேன்-அந்த
மூன்றெழுத்து தான் என்று........