காதல் தலைவனுக்கு ஓர் செய்தி

என் தலைவா!
என் உடல் சுடுகிறது,
என் இதயம் படபடக்கிறது,
நானோர் பேரிடியாய் உனைத்
தாக்குகிறேனோ! - ஆனால்
நீயின்றி எனக்கு பைத்தியமே
பிடித்து விடுகிறது!

வார்த்தைகளில் சொல்லொனாத
வேதனை என்னுள் எழுகிறது,
நீ வரும் நாள் எப்போது?
நீ மட்டுமே என் உறவென அறியாயோ,
நீயின்றி நானில்லை,
விரைந்து வா!
என் தலைவா!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Feb-13, 4:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 116

மேலே