நண்பனுக்காக...

என் தாயின்பாசத்தில் வாழ்ந்த நாட்கள் என் நினைவிலில்லை...
உன் நட்பின் நேசத்தில் வாழ்ந்த நாட்கள் மட்டும்
என்றும் பசுமையாக...
பசித்திட்ட வயிற்றில் பாலை வார்த்திட்ட தாயும் இல்லை இன்று என்னோடு...
தடுமாறும் மனத்தினை தாங்கிப்பிடித்திடும் உன் நட்பும் இருக்குமா என்றும் என்னோடு...?
தாயின் கைப்பிடித்து நடைபழகிய காலங்கள் கனவுகளானது...!
உன் கரத்தில் கரம் கோர்த்து நடந்திடும் இந்நாட்களும் நீளுமா எந்நாளும்?
நிலாச்சோறு ஊட்டிய நிறைந்த மனதுள்ள தாயும் நிலைக்காமல் போனார்...
நிலவுக்குச் சென்று வாழத்திட்டமிடும் நம் நட்பும் நிலைக்குமா எந்நாளும்...!
மூழ்கடித்திட வரும் காலவெள்ளத்தின் ஓட்டத்தில் எதிர்நீச்சலிடும் வேளையிலே...
நீ என்னை நினைக்க மறந்தாலும்...
இந்த இனிய நினைவுகள் இருக்கும்
என்றும் என்னோடு...
நான் கரைசேர்ந்த பின்பும்....
நீயும் வைத்திருப்பாய் அதை வைத்திருப்பாய்
என்று நம்புகிறேன்...!
கரையில் ஒரு கோட்டை கட்டியிருந்தாலும்...!
நண்பனே...!

எழுதியவர் : ராஜதுரை (16-Feb-13, 12:25 pm)
சேர்த்தது : RajaduraiManimegalai
பார்வை : 333

மேலே