புத்தகமும் பள்ளியும்

பார்த்தவுடன்
பரவச உலகிற்கு
அழைத்துச் செல்கிறது
இந்த புஸ்தகம்.
உறக்கத்துடன்!

புதுமையை புகட்டும்
பள்ளிகள் பின்தங்கியிருக்கின்றன
பழையன சொல்லும்
பாடங்கள் பிரசுரிக்கப்ப்டுகின்றன்
கட்டிடம் மூன்றடுக்கு
கட்டணம் ஆறடுக்கு பணக்கட்டுகளாய்
கல்வியின் விலை?
கல்லா நிரம்பும் வரை
கல்வி வியாபாரம் என்கின்ற
கலாச்சாரம் ஆகிவிட்டது
மதிப்பெண்களுக்கு மனப்பாடம்
செய்யும் மாணவன்
புத்தகங்களின் பரவச
உலகிற்கு செல்கிறான்...

-அரோ

எழுதியவர் : அரோ (16-Feb-13, 5:08 pm)
பார்வை : 175

மேலே