காதல் தின்ற கற்பு-கே.எஸ்.கலை
பத்தும் ஆறும் சேர்ந்த வயசு
பத்திக்கிட்டு எரிஞ்சபோது
பாச வார்த்த பேசி பேசி
பறிச்சி போனா எம்மனச !
பள்ளிக்கூடம் போற காலம்
டீச்சர் பேச்சி கேக்கவில்ல
பாவி அவன் பேச்சி மட்டும்
கேக்கலன்னா தூக்கம் வல்ல !
கொஞ்சி கொஞ்சி பேசி அவன்
நெஞ்சி முழுக்க நெறஞ்சிப்புட்டான்
கொஞ்சம் நேரம் பேசல்லன்னா
நெருஞ்சியால குத்தும் நெஞ்சு !
கொஞ்ச நாளு தூரருந்து
கொஞ்சி பேசி ருசிச்சதால
கொஞ்ச கொஞ்ச கிட்ட வந்து
தொட்டு பேச தொடங்கிபுட்டோம் !
தப்புன்னு தெரிஞ்சும் கூட
தப்பு செய்ய ஆச பட்டோம்,
தொட்டு பேச துடிச்ச மேனி
கட்டுபாட்ட இழந்து போச்சி !
கொஞ்சி கொஞ்சி பேசி என்ன
இஞ்சி இஞ்சா தின்னுபுட்டு
நஞ்சி போல வார்த்த சொல்லி
நெஞ்சொடச்சி போயுபுட்டான் !
நெஞ்சுக்குள்ள ஒதச்ச அவன்
வயித்துக்குள்ள ஒதைக்க வச்சி
வாழ எலய போல என்ன
வீசிப்புட்டு போயுபுட்டான் !
பத்தியமா வளத்த புள்ள
பைத்தியமா ஆன கத
பெத்தவுங்க காதுக்கின்னோ
சத்தியமா தெரியாது !
பாவி இவ சோக கத
யாருக்குமே நேரக்கூடா
பத்திரம்மா வாழுங்கடி
கற்பு ரொம்ப தேவயடி !